search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர் விடுதலை"

    இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக பாகிஸ்தான் நாட்டு சிறையில் மூன்றாண்டுகள் தண்டனை அனுபவித்த ஹமித் நிஹால் அன்சாரி இன்று விடுதலை செய்யப்பட்டார். #Pakistanreleases #Indianprisoner #HamidNihalAnsari
    இஸ்லாமாபாத்:

    மும்பை நகரை சேர்ந்தவர் ஹமித் நிஹால் அன்சாரி(33). சமூக வலைத்தளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டு பெண்ணை காதலித்துவந்த அன்சாரி ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்த குற்றத்துக்காக கடந்த 2012-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

    உரிய ஆவணங்கள் ஏதுமின்றி இந்தியாவுக்காக உளவு பார்ப்பதற்காக தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக அன்சாரி மீது பெஷாவர் நகரில் உள்ள ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    போலி அடையாள அட்டையுடன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த குற்றத்துக்காக இந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, கடந்த 15-12-2015 அன்று அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தண்டனை காலம் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்தும் அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை.

    அன்சாரி தொடர்பான ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்கப்படாததால் அவரை விடுதலை செய்யாமல் இருப்பதாக தெரிவித்த பெஷாவர் சிறைத்துறை அதிகாரிகளின் விளக்கத்தை ஏற்றுகொள்ள பெஷாவர் உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    அன்சாரியை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பெஷாவர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், ஹமித் நிஹால் அன்சாரி  இன்று விடுதலை செய்யப்பட்டதாகவும், அவரை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும் பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முஹம்மது பைசல் தெரிவித்துள்ளார். #Pakistanreleases #Indianprisoner #HamidNihalAnsari
    பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மத்திய சிறையில் 36 ஆண்டுகள் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் விடுதலை செய்யப்பட்டு இன்று தாயகம் திரும்பினார். #GajanandSharma #Lahoreprison
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டின் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 26 மீனவர்கள் உள்பட 29 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு நேற்று விடுதலை செய்தது.

    அவர்கள் இன்று இந்திய எல்லைப்பகுதியான அட்டாரி-வாகா எல்லைப்பகுதிக்கு இன்று பஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

    விடுதலை ஆனவர்களில் ஒருவரான கஜானந்த் சர்மா கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து திடீரென்று தனது 32 வயதில் காணாமல் போனார்.

    அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடியும் கஜானந்த் சர்மாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர், அவர் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பல ஆண்டுகள் கழித்து குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.

    வாழ்நாளில் இனி ஒரு முறையாவது தனது கணவரின் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலுடனும், ஏக்கத்துடனும் காணாமல் போவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட கஜானந்த் சர்மாவின் பழைய புகைப்படத்துடன் அவரது மனைவி மக்னி தேவி காலம் கடத்தி வந்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்ட 29 கைதிகளில் ஒருவராக லாகூர் மத்திய சிறையில்  36 ஆண்டுகள்  அடைத்து வைக்கப்பட்டிருந்த கஜானந்த் சர்மா இன்று தாயகம் திரும்பினார்.

    தற்போது 68 வயது முதியவராக இருக்கும் கஜானந்த் சர்மாவை அட்டாரி-வாகா எல்லைப்பகுதியில் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடன் கட்டித்தழுவி வரவேற்றனர். #GajanandSharma #Lahoreprison
    ×